Monday, October 13, 2008

நண்பர்கள்

நண்பர்கள்.. ப்ரெண்ட்ஸ்... இந்த வார்த்தைக்கு இருக்கற அர்த்தத்தோட ஆழம் என்னனு நான் கொஞ்சம் நாள் முன்னாடி தான் தெரிஞ்சிகிட்டேன். எனக்கு நெறைய நண்பர்கள் உண்டு. என்னோட வீட்டுக்கு பக்கத்துல இருந்த என்னோட 20 வருட கால நண்பன், அப்புறம் என்னோட கல்லூரி நண்பர்கள் மற்றும் என்னோட வேலை செய்யற தோழர்கள். சின்ன வயசுல இருந்தே எனக்கு நண்பர்கள் மேல அன்பு உண்டு. ஆனா அது எல்லாருக்கும் இருக்கற அந்த ஒரு சின்ன உணர்ச்சி தான். ஆனா தோழமைனு சொல்றது எவளோ பெரிய விஷயம்னு கொஞ்சம் நாள் முன்னாடி அனுபவிச்சி தெரிஞ்சிகிட்டேன். தோள் கொடுப்பான் தோழன்னு சொன்னது எவளோ ஒரு சத்தியமான வார்த்தைனு என்னோட நண்பர்கள் நிருபிசாங்க. என்னோட பிரச்சனை என்னனு எல்லாருக்கும் தெரியரதுல விருப்பம் இல்லாததால அத பத்தி நான் இங்க ரொம்ப சொல்லல. ஆனா இன்னிக்கு நான் அத கடந்து வந்ததுக்கு காரணம் சத்தியமா என்னோட நண்பர்கள் தான். அவங்க அத்தனை பேருக்கும் நான் எவளோ நன்றி சொன்னாலும் அது இணை ஆகாது. கேட்டா கூட உதவி செய்யாத இந்த காலத்துல, தேடி வந்து உதவி செஞ்சவங்களுக்கு என்னங்க கைமாறு செய்ய முடியும்? அவங்கள எல்லாரும் எனக்கு பழக்கம் ஏற்படுத்தி குடுத்த கடவுளுக்கு என் நன்றி.

Sunday, October 12, 2008

எனது மகள்

வாழ்கையில நாம ரொம்ப சந்தோஷ படர தருணங்கள் நமக்கு மறக்க முடியாததா இருக்கும். அதுல நமக்கு ஒரு வாரிசு வரும் பொது இருக்கற சந்தோஷமும் ஒன்னு. என்னவோ அம்பானி மாதிரி வாரிசுன்னு எல்லாம் சொல்றேன்னு நெனச்சிகாதீங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பொறந்த என் பொண்ணு நிதர்ஷனா வ தான் அப்படி சொன்னேன். இதுல மேட்டர் என்னனா நானும் என் மனைவியும் பையன் தான் பிறப்பான் நு நெனச்சி பேரு எல்லாம் யோசிச்சி வெச்சிட்டோம். பொண்ணு வேண்டாம்னு இல்ல. Instinct நு சொல்லுவாங்களே, அதான். ரெண்டு பேருக்கும் அது டுமீல் ஆனது ரொம்ப சந்தோஷம். என் பொண்ண பத்தி இனிமே அப்போ அப்போ இங்க எழுதுவேன். கட்டாயமா வந்து பாருங்க...

ரிபீட்டு

ரொம்ப நாள் ஆச்சுங்க நானே என்னோட blog பார்த்து. காரணம், சில சொந்த பிரச்சனைகள். அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தீர்ந்துகிட்டு வருது. அதனால என்னோட கவனம் இப்போ மறுபடியும் உங்கள அறுக்கரதுல வந்தாச்சு. என்ன திட்டனும்னா என்னோட நண்பன் கிரி யும் சேர்த்து திட்டுங்க. அவனோட blog படிச்சா எல்லாருக்குமே நாமளும் இந்த மாதிரி எழுதனும்னு தோணும். அவனோட http://girirajnet.blogspot.com/ படிச்சி பாருங்க. உங்களுக்கே புரியும். எல்லாத பத்தியும் எழுதறான். நமக்கும் கொஞ்சம் நப்பாசை ஒட்டிகிச்சு. அதனால ரிபீட்டு ஆயிட்டேன். இனிமே முடிஞ்சா வரை இந்த வலை பக்கம் விரிவடையும். உங்கள வாழ்த்துக்களோட.

Thursday, May 8, 2008

தமிழ் பட காமெடி வசனங்கள்

நெறைய தமிழ் படத்துல எல்லாம் காமெடிக்கு நெறைய முக்கியத்துவம் குடுத்து எடுத்திருபாங்க. சில படத்துல எல்லாம் காமெடி இல்லாம சீரியசா சொன்ன டயலாக் எல்லாம் காமெடி ஆயிடும். அந்த மாதிரி சில டயலாக் எல்லாம் பாப்போம்
1. சந்திரமுகி - "என்ன கொடும சரவணன் இது"
சமீப காலத்துல கிட்ட தட்ட எல்லா தமிழ் மக்களும் சொல்ல கூடிய ஒரு டயலாக். எவளோ சீரியஸ் சீன்ல பிரபு இத சொல்லும் போது நமக்கே இது என்ன கொடும னு தோணும்
2. ரன்
வில்லன் - "யாருடா அவன்?"
அடியாள் - "சிவா"
வில்லன் - "எவனா இருந்தா எனக்கென?"
அடங்கொக்கமக்கா பின்ன எதுக்கு டா கேட்ட ?
3. வேட்டையாடு விளையாடு - தட் இஸ் ராகவன் இன்ச்டின்க்ட்
என்ன கொடும சார் இது? கொஞ்சம் கூட கூசாம இத எப்படி சொல்ல முடிஞ்சிது
4. நரசிம்மா - "உண்ண தேடி ஒரு அழகான மகராசன் வருவான்"
எப்படிங்க நம்ம கேப்டன் தான் ஹீரோ னு தெரிஞ்சும் இப்படி ஒரு டயலாக் எழுத மனசு வந்துச்சு? அதான் படத்தோட ரிலீஸ் கூட பாக்காம டைரக்டர் போயிட்டாரு பாவம். இந்த படத்துல வடிவேலு வர சீன் எல்லாம் தூக்கிட்டா படம் முழுக்க காமெடி தான்
5. சுள்ளான் - பார்கறதுக்கு தான் சுள்ளான், சூடானேன்
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இதுஎல்லாம் தனுஷ் சொல்ற மாதிரி எடுபாங்களா? இந்த படத்துல அதிகமா வர வார்த்தை - ஏய். கத்தி கத்தியே காதுல ரத்தம் வர அளவுக்கு அருப்பாங்க.

Monday, May 5, 2008

யாரடி நீ மோகினி - விமர்சனம்

போன வாரம் சத்யம் தியேட்டர் போய் யாரடி நீ மோகினி படம் பார்த்தேன். படம் முழுக்க ஒரு விஷயம் தான் ரொம்ப நெருடிகிட்டே இருந்துச்சு. லாஜிக் இல்லாம இன்னும் எவளோ காலம் தான் படம் எடுத்து நம்மள ஏமாத்த போறாங்க? நான் இத சொல்றதுக்கு காரணம் இருக்கு. மேல படிச்சா புரியும்.
முதல் சீன்ல தனுஷ் ஒரு வேலை தேடற வெட்டி ஆளுன்னு சொல்லிடறாங்க. நம்ம தனுஷுக்கு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி. சும்மா சொல்ல கூடாதுங்க. நான் கூட இவரு எல்லாம் ஹீரோ வா பாக்க நமக்கு என்ன தலஎழுத்தானு நெனப்பேன். இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் அவரு கலக்கராருங்க. அவரோட அப்பாவா மறைந்த நடிகர் ரகுவரன். மனிதர் நீட். அவர பத்திஒரு தனி போஸ்ட் எழுதணும்.
படத்துல தனுஷோட நண்பர்களா மிர்ச்சி சுசி புருஷன் கார்த்திக், அப்புறம் தனுஷோட லக்கி மேன் கருணாஸ். பாவம் கருனாசுக்கு காமெடி பண்ண ஒரே ஒரு சான்ஸ் தான். அப்புறம் கார்த்திக் எல்லா படத்துலயும் அவருக்கு நிச்சயம் பன்னவள வேற யாரவது ஓடிகிட்டு போகற மாதிரி தான் நடிப்பேன்னு ஏதாவது சபதம் போட்டிருகார் போல.
தனுஷ் நயந்தாராவ பார்த்த உடனே காதல். அவங்கள ஒரு சாப்ட்வேர் கம்பெனி ல பார்கராரு. இவரும் அங்கயே வேலைக்கு போக முடிவு பண்றாரு. GD ல தமிழ் ல பேசினாலும் சாப்ட்வேர் கம்பெனி ல வேலை கெடைக்கும்னு நான் இப்போ தாங்க பார்கறேன். எப்படியோ தனுஷ் அதே கம்பெனில வேலைக்கு சேர்ந்து ப்ராஜெக்டுக்கு நயன் கூட ஆஸ்திரேலியா போறாரு. அங்க இவரோட லவ் சொல்லி திட்டு வாங்கராறு. வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பொலம்ப, அவரு கெளம்பி நயன் கிட்டபோய் பேச, அவங்க அவரையும் பேடு வார்த்தையில திட்ட, அவரு வீட்டுக்கு வந்து ஹார்ட் அட்டாக் ல போயிடறாரு.
அப்புறம் தனுஷ் கார்த்திக் கல்யாணத்துக்கு அவரு கூட ஊருக்கு போறாரு. அப்போ தான் நயன் தான் கல்யாண பொண்ணு னு தெரியுது. நயனுக்கு தனுஷ் அப்பா உயிரோட இல்ல னு தெரிஞ்சி மனிப்பு கேக்கறாங்க. நம்ம ஹீரோவும் ஒ.கே. சொல்றாரு. அப்புறம் நயனுக்கு தனுஷ் மேல லவ் வர, அவங்க கல்யானதுக்கு முன்னடி நாள் அத சொல்ல, கார்த்திக் பார்துடராறு. இதுக்கு மேல நயன் யார கல்யாணம் பண்றாங்க னு கிளைமாக்ஸ்.
அங்க அங்க காமெடி சீன் நெறைய தூவி இருக்காங்க. பாட்டு எல்லாம் சுமார். நயன் நல்லாவே இருக்காங்க. நடிப்பும் வருது. கடைசி சீன்ல கார்த்திக் அவ யாரு கூட படுப்பானு கேக்கற சீன்ல இன்னும் நடிப்ப காட்டி இருக்கலாம்.
நான் மொதல்ல சொன்ன லாஜிக் விஷயம் என்ன னு பாப்போம்:
1. தனுஷும் கார்த்திக்கும் ரொம்ப க்ளோஸ் நண்பர்கள். அப்போ கார்த்திக்குக்கு தனுஷ் எங்க வேலை பண்றாரு னு கூடவா தெரியாது?
2. தனுஷுக்கு அவரோட நண்பர் கல்யாணம் பண்ண போற பொண்ணு பேரு கூடவா தெரியாது?
3. கல்யாணத்துக்கு வந்த கருனாசபார்த்து நயன் கூட வேலை செய்யரவருனு கார்த்திக் கிட்டயே சொல்றாரு. அப்போ கூடவா கார்த்திக்குக்கு சந்தேகம் வரல?
இதெல்லாம் சின்ன விஷயமா நீங்க நெனச்சா (என்ன மாதிரி) இந்த படம் சுமார். அப்படி ஒரு சூப்பர் படம் பாக்கணும்னு நெனச்சா, இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருங்க. தலைவர் படம் அரசாங்கம் வருது.

Monday, March 3, 2008

சென்னை டிராபிக்

நான் தெனமும் வேளச்சேரி ல இருந்து நுங்கம்பாக்கம் வரைக்கும் வந்து போறேன். கார் ல தான் வரேன். சாதரணமா டிராபிக் இருந்தா நாற்பது நிமிஷம் ஆகும். ஆனா முக்கால் வாசி நாள் எனக்கு ஒரு மணி நேரம் மேல ஆகும். காரணம் ஓவர் டிராபிக். எங்க இருந்துங்க வராங்க? சர்க்கஸ் கம்பெனில வேலை செய்ய வேண்டியவன் எல்லாம் IT கம்பெனில வேலை வாங்கி, ஒரு கார் வாங்கி அத நாலு பேரு மேல ஏத்த வரம் வாங்கிட்டு வராங்க. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஒரு வண்டிய இடது பக்கமா ஓவர் டேக் பண்ண கூடாதுன்னு யாரும் சொல்லி தரது இல்ல. அது தான் ரூல் . ஆனா நமக்கே அது தெரியனும். ஒருத்தன் ஓவர் டேக் பண்ணா அவன ஏதோ பிரபு கார்த்திக அக்னி நட்சத்திரம் படத்துல இடிக்கற மாதிரி போயி பயம் காட்ட வேண்டியது. அதுல ஒரு சந்தோஷம். எல்லாரும் பொறுமையா வண்டி ஓட்டினா எவளோ விபதுக்கள தடுக்கலாம் தெரியுமா? ஆம்புலன்ஸ் வண்டி போனா அதுக்கு வழி விட எவளோ யோசிகறாங்க? அது பின்னாடியே PM செக்யூரிட்டி மாதிரி பைக் எல்லாம் பறக்குது. பார்த்தா அவங்க பின்னாடி போனா சீக்கிரம் போயிடலாம்னு ஒரு கணக்கு. சிக்னல் ல போலீஸ் இல்லைனா எவளோ பேரு சிக்னல் மதிக்காம போறாங்க? வள்ளுவர் கோட்டம் சிக்னல் ல போயி பாருங்க. சிக்னல மதிச்சி நிக்கறவன் காது கிழியிர வரைக்கும் ஹாரன் அடிச்சே கொன்னுடுவாங்க. ஏதோ இவனுங்க போயி தான் நாட்ட தீவிரவாதிங்க கிட்ட இருந்து காப்பாத்த போற மாதிரி. அதுக்கு தான் நம்ம கேப்டன் இருக்காரு இல்ல. நம்ம கூட மத்த வண்டி ஓட்றவங்க எல்லாருமே நம்மள பொறுத்த வரைக்கும் வில்லங்க தான். ஏங்க இப்படி? வீட்ல நமக்காக குடும்பம் காத்திகிட்டு இருக்குன்னு யாரும் ஒரு பெரிய விபத்தா சந்திக்கற வரைக்கும் யோசிகறது இல்ல. நாம செய்யறது தப்பு னு புரிஞ்சிகாமையே நெறைய பேரு செய்யறாங்க. தயவு செஞ்சி பொறுமையா ஓட்டுங்க.

உலக கோப்பை மறுபடியும் நம் கையில்

போன வருஷம் 20-20 ல எப்படியோ உலக கோப்பைய வாங்கிட்டு வந்து மும்பை புல்லா ரவுண்டு அடிச்சாங்க நம்ம பசங்க. ஆனா அவங்கள கௌரவ படுத்த வேண்டிய மேடையில கிரிக்கெட் கிரௌண்ட கூட அரசியல் கூட்ட கிரௌந்து மாதிரி ஆகிடாங்க நம்ம நாட்டு அரசியல்வாதிங்க. போனா போகுதுன்னு தோனிக்கு மட்டும் ஒரு சீட் குடுத்தாங்க. அந்த ஆரவாரம் எல்லாம் காணாம போன அப்புறம் நம்ம சிங்க குட்டிங்க மறுபடியும் ஒரு உலக கோப்பைய நம்ம BCCI ஆபீஸ்ல வெக்க ஏற்பாடு பண்ணிடாங்க. அதாங்க, மலேசியால நடந்த அண்டர் 19 உலக கோப்பைய இந்தியா தட்டிகிட்டு வந்துடிச்சி. டக்க்வர்த் லூவிஸ் னு ரெண்டு மகா அறிவாளிங்க அவங்க பங்குக்கு ஹெல்ப் பண்ணங்க னு சொல்லியே ஆகணும். அப்படி சௌத் அபிரிகாவுக்கும் DL மேட்டேருக்கும் என்ன தான் அவளோ பொருத்தம்னு தெரியல. அவங்க ரெண்டு பேருக்கும் சௌத் அபிரிகாவுக்கு போனா அவங்கள நெல்சன் மண்டேலாவ விட நாலு நாள் அதிகமா உள்ள வெக்கணும்னு ஒரு ஐடியா இருக்கறத கேள்வி. நம்ம டீம்ல ஜடேஜா பேருல ஒரு புது பையன் இருக்கான். நம்ம பழைய ஜடேஜா இவரோட தாத்தான்னு சொல்லிகறாங்க. பௌலிங் பேட்டிங் ரெண்டும் நல்லா வருது. சரியா கொண்டு போனா இந்தியா அணிக்கு ஒரு நல்ல ஆல் ரௌண்டேர் வரலாம். இல்லைனா நம்ம பசங்க வெச்சிக்க ஒரு புது ஹேர் ஸ்டைல் மட்டும் வரும். எப்படி இருந்தாலும் இன்னொரு கப் கொண்டு வந்த நம்ம பசங்களுக்கு ஒரு ஒ போடுவோம்.