Monday, March 3, 2008

சென்னை டிராபிக்

நான் தெனமும் வேளச்சேரி ல இருந்து நுங்கம்பாக்கம் வரைக்கும் வந்து போறேன். கார் ல தான் வரேன். சாதரணமா டிராபிக் இருந்தா நாற்பது நிமிஷம் ஆகும். ஆனா முக்கால் வாசி நாள் எனக்கு ஒரு மணி நேரம் மேல ஆகும். காரணம் ஓவர் டிராபிக். எங்க இருந்துங்க வராங்க? சர்க்கஸ் கம்பெனில வேலை செய்ய வேண்டியவன் எல்லாம் IT கம்பெனில வேலை வாங்கி, ஒரு கார் வாங்கி அத நாலு பேரு மேல ஏத்த வரம் வாங்கிட்டு வராங்க. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஒரு வண்டிய இடது பக்கமா ஓவர் டேக் பண்ண கூடாதுன்னு யாரும் சொல்லி தரது இல்ல. அது தான் ரூல் . ஆனா நமக்கே அது தெரியனும். ஒருத்தன் ஓவர் டேக் பண்ணா அவன ஏதோ பிரபு கார்த்திக அக்னி நட்சத்திரம் படத்துல இடிக்கற மாதிரி போயி பயம் காட்ட வேண்டியது. அதுல ஒரு சந்தோஷம். எல்லாரும் பொறுமையா வண்டி ஓட்டினா எவளோ விபதுக்கள தடுக்கலாம் தெரியுமா? ஆம்புலன்ஸ் வண்டி போனா அதுக்கு வழி விட எவளோ யோசிகறாங்க? அது பின்னாடியே PM செக்யூரிட்டி மாதிரி பைக் எல்லாம் பறக்குது. பார்த்தா அவங்க பின்னாடி போனா சீக்கிரம் போயிடலாம்னு ஒரு கணக்கு. சிக்னல் ல போலீஸ் இல்லைனா எவளோ பேரு சிக்னல் மதிக்காம போறாங்க? வள்ளுவர் கோட்டம் சிக்னல் ல போயி பாருங்க. சிக்னல மதிச்சி நிக்கறவன் காது கிழியிர வரைக்கும் ஹாரன் அடிச்சே கொன்னுடுவாங்க. ஏதோ இவனுங்க போயி தான் நாட்ட தீவிரவாதிங்க கிட்ட இருந்து காப்பாத்த போற மாதிரி. அதுக்கு தான் நம்ம கேப்டன் இருக்காரு இல்ல. நம்ம கூட மத்த வண்டி ஓட்றவங்க எல்லாருமே நம்மள பொறுத்த வரைக்கும் வில்லங்க தான். ஏங்க இப்படி? வீட்ல நமக்காக குடும்பம் காத்திகிட்டு இருக்குன்னு யாரும் ஒரு பெரிய விபத்தா சந்திக்கற வரைக்கும் யோசிகறது இல்ல. நாம செய்யறது தப்பு னு புரிஞ்சிகாமையே நெறைய பேரு செய்யறாங்க. தயவு செஞ்சி பொறுமையா ஓட்டுங்க.

உலக கோப்பை மறுபடியும் நம் கையில்

போன வருஷம் 20-20 ல எப்படியோ உலக கோப்பைய வாங்கிட்டு வந்து மும்பை புல்லா ரவுண்டு அடிச்சாங்க நம்ம பசங்க. ஆனா அவங்கள கௌரவ படுத்த வேண்டிய மேடையில கிரிக்கெட் கிரௌண்ட கூட அரசியல் கூட்ட கிரௌந்து மாதிரி ஆகிடாங்க நம்ம நாட்டு அரசியல்வாதிங்க. போனா போகுதுன்னு தோனிக்கு மட்டும் ஒரு சீட் குடுத்தாங்க. அந்த ஆரவாரம் எல்லாம் காணாம போன அப்புறம் நம்ம சிங்க குட்டிங்க மறுபடியும் ஒரு உலக கோப்பைய நம்ம BCCI ஆபீஸ்ல வெக்க ஏற்பாடு பண்ணிடாங்க. அதாங்க, மலேசியால நடந்த அண்டர் 19 உலக கோப்பைய இந்தியா தட்டிகிட்டு வந்துடிச்சி. டக்க்வர்த் லூவிஸ் னு ரெண்டு மகா அறிவாளிங்க அவங்க பங்குக்கு ஹெல்ப் பண்ணங்க னு சொல்லியே ஆகணும். அப்படி சௌத் அபிரிகாவுக்கும் DL மேட்டேருக்கும் என்ன தான் அவளோ பொருத்தம்னு தெரியல. அவங்க ரெண்டு பேருக்கும் சௌத் அபிரிகாவுக்கு போனா அவங்கள நெல்சன் மண்டேலாவ விட நாலு நாள் அதிகமா உள்ள வெக்கணும்னு ஒரு ஐடியா இருக்கறத கேள்வி. நம்ம டீம்ல ஜடேஜா பேருல ஒரு புது பையன் இருக்கான். நம்ம பழைய ஜடேஜா இவரோட தாத்தான்னு சொல்லிகறாங்க. பௌலிங் பேட்டிங் ரெண்டும் நல்லா வருது. சரியா கொண்டு போனா இந்தியா அணிக்கு ஒரு நல்ல ஆல் ரௌண்டேர் வரலாம். இல்லைனா நம்ம பசங்க வெச்சிக்க ஒரு புது ஹேர் ஸ்டைல் மட்டும் வரும். எப்படி இருந்தாலும் இன்னொரு கப் கொண்டு வந்த நம்ம பசங்களுக்கு ஒரு ஒ போடுவோம்.